படுக்கை கிடைக்காமல் சென்னையில் இறக்கும் கொரோனா நோயாளிகள்; காரணம் என்ன?- தமிழக அரசு விளக்கம்

படுக்கை கிடைக்காமல் சென்னையில் இறக்கும் கொரோனா நோயாளிகள்; காரணம் என்ன?- தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த திங்கட் கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இருப்பினும் கொரோனா பரவல் தொடர்ந்து ஏற்றத்துடனேயே காணப்படுகிறது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பலர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் பிரதான அரசு மருத்துவமனையான ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற எத்தனித்து செல்கிறார்கள். அப்படி கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்ற போதும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் இல்லாத காரணத்தால் சிலர் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே, ஆம்புலன்ஸில் இறக்கும் துயர சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இது மிகப் பெரும் சர்ச்சையும், தமிழக அரசின் மீது விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சூழலுக்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

'பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தீவிரப் பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த மருத்துவமனைகள் அவர்களை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றன.

அதே நேரத்தில் இங்கு இருக்கும் ஆக்சிஜன் பொருத்திய அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. கூடுதல் படுக்கை வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நாங்கள் படுக்கை வசதிகளை செய்து வருகிறோம். விரைவில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com