'சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது'- அமைச்சர் சேகர் பாபு

'சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது'- அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்திலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை மாநகரத்தில் கோவிட்-19 பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

இன்று அவர், சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் கொரோனா சிகிச்சை மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இது வரும் நாட்களில் மேலும் குறையும். கொரோனா தொற்றை வீழ்த்தும் ஒற்றை ஆயுதமாக இருப்பது தடுப்பூசி தான். எனவே மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com