ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? தமிழக முதல்வர் இன்று அறிவிப்பு!

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? தமிழக முதல்வர் இன்று அறிவிப்பு!

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் கூடுதல் தளர்வுகள் குறித்தும், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த தமிழக முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளார். கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இருக்காது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற 27 மாவட்டங்களில் வரும் திங்கள் முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு வாய்ப்பு என செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி டீக்கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு என்றும் இந்த ஊரடங்கில் தான் கூடுதல் தளர்வுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று 17 ஆயிரத்திற்கும் குறைந்துள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து இந்த கூடுதல் தளர்வுகளை அறிவிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதன்படி இன்று தமிழக முதல்வர் இந்த தளர்வுகள் குறித்த அறிவிப்பை அறிவிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com