தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீடிப்பா? செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீடிப்பா? செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இரண்டு வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் தற்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அவர் கூறிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:

கொரனோ வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய பிரச்சனை இருக்காது என்றும், உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளோம் என்றும் எனவே இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வழங்கப்படும் என்றும் கொரனோ தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம் என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கடந்த இரண்டு வாரத்தில் தடுப்பூசி வீணாகுவது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அனைவரும் தடுப்பூசி போட முன்வரவேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் தேவைப்பட்டால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com