ஊரடங்கு தளர்வுகள் கட்? அனைத்து கட்சி கூட்டத்தில் முக ஸ்டாலின் கேட்ட கேள்வி!

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஊரடங்கு தளர்வுகள் கட்? அனைத்து கட்சி கூட்டத்தில் முக ஸ்டாலின் கேட்ட கேள்வி!

ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகளை நிறுத்தலாமா என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தலைவர்கள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தளர்வுகளை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறி வருகின்றனர். எனவே இந்த தளர்வுகளை தொடர்ந்து அனுமதிப்பதா? அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கமாறு கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதல்வரின் கேள்விக்கு அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்ட பின் ஒருசில தளர்வுகள் கட் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com