தமிழக முதல்வர் டெல்லி செல்லும் தேதி அறிவிப்பு: பிரதமர் சந்திப்பில் என்னென்ன கோரிக்கைகள்?

தமிழக முதல்வர் டெல்லி செல்லும் தேதி அறிவிப்பு: பிரதமர் சந்திப்பில் என்னென்ன கோரிக்கைகள்?

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகியுள்ள நிலையில் விரைவில் அவர் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்றும் அப்போது தமிழக நலன்கள் குறித்த கோரிக்கைகளை அவர் வைப்பார் என்றும் கூறப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட பிரதமரை சந்திக்க தேதி கேட்டு பிரதமர் அலுவலகத்தை தமிழக அரசு தொடர்பு கொண்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமரை சந்திப்பது குறித்த தேதி முடிவு செய்யப்படும் என பிரதமர் அலுவலக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியை சந்திக்க ஜூன் 17ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசிடம் இருந்து முதல்வர் பேசி அதிக அளவில் தடுப்பூசி கொடுக்க வலியுறுத்துவார் என்றும், கருப்பு பூஞ்சை மருந்துகள் கேட்டு முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வரும் நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமரிடம் பேசுவார் என்றும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. முதலமைச்சர் ஆன பிறகு முதல்முறையாக முகஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com