மருத்துவர் குழுவினர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை: மே 31 வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு என தகவல்!

மருத்துவர் குழுவினர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை: மே 31 வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு என தகவல்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு நாளை மறுநாள் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பதா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதா என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் முக்கிய அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழகத்தில் 36 ஆயிரத்தையும் தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதாலும் ஊரடங்கை நீக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்த கட்டமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது குறித்தும் மருத்துவ வல்லுனர்கள் உடன் என்று முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார். மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை இன்று முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com