தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: இன்று முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: இன்று முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஊரடங்கு இன்னும் 3 நாட்களில் முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்தை கேட்டு அதன் பின் ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் மட்டும் அறிவிப்பு ஆகிய இரண்டில் ஒரு முடிவை முதல்வர் எடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமைச் செயலக வட்டாரங்களிலிருந்து வெளிவந்திருக்கும் தகவலின்படி ஊரடங்கு நீட்டிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீடிக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com