கொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் திருமணம்: தமிழகத்திலா இந்த நிலைமை?

கொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் திருமணம்: தமிழகத்திலா இந்த நிலைமை?

இந்தியாவில் ஒரு காலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாகத்தான் குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் தற்போது மாஸ்டர் டிகிரி வரை படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மீண்டும் குழந்தைகள் திருமணம் தலைதூக்கி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் பழங்குடி கிராமங்களில் குழந்தைகள் திருமணம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2019, 2020 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருவதாகவும், சுமார் 150 குழந்தைகள் திருமணம் தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெரும்பாலான கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டு வருவதாகவும் இதனை உடனடியாக அரசு தலையிட்டு குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com