Connect with us

தமிழ்நாடு

சுக்குநூறாக உடைந்துவிட்டேன்: நீட் தற்கொலை குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை!

Published

on

By

stalin

கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

கடந்த செப்டம்பர் 2017-ல் மாணவி அனிதா இறந்தபோது என்ன மனநிலையில் நான் இருந்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். கடந்த சனிக்கிழமை மாணவர் தனுஷ் தற்கொலையின்போதே, இனி இப்படியொரு துயரம் நிகழக்கூடாதென மாணவச்செல்வங்களை கேட்டுக்கொண்டேன். ஆனால், நேற்று அரியலூர் மாணவி கனிமொழியும், இன்று மாணவி சௌந்தர்யாவும் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்த அடுத்தடுத்த செய்திகளை கேட்டதும், நான் சுக்குநூறாக உடைந்துபோய்விட்டேன். இப்போது எனக்கு வேதனையை விடவும், இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாதென்ற கவலைதான் அதிகம் இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவு, இப்போதுதான் கொஞ்சம் திறந்திருக்கு. அதையும் இழுத்து மூடும் செயல்தான், நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. படிப்பதற்கு, தகுதி தேவையில்லை. படிச்சா, தகுதி தன்னால் வந்துவிடும். பல குளறுபடிகளை கொண்ட நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்ககூடியது. அதனாலேயே தி.மு.கழகம் இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியது. நாங்கள் இதற்கு முன் ஆட்சிப்பொறுப்பிலிருந்தபோதும் இந்தத் தேர்வை நடத்தவிடவில்லை. ஆனாலும் சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக இந்தத் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தனர். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடரனுமென நினைக்கிறார்கள்.

மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆகவேண்டும் என நினைப்பவர்களுடைய கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு இன்னும் இதிலிருந்து இறங்கிவராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், ‘12ம் வகுப்பை மட்டுமே அடிப்படையாக வைத்து, மருத்துவ சேர்க்கை நடத்தலாம்’ எனக்கூறி நீட் தேர்வை நடத்த வேண்டாமென்ற மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இதை ஒருமனதாக இருந்து நிறைவேற்றியுள்ளோம். இந்த மசோதாவை, இன்னும் பல்வேறு மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களுடன் இணைந்து நீட் ரத்தை உறுதிசெய்வோம். இதுபோன்ற நேரத்தில், நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்வோருடைய செய்திகள், என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதுபோல இறங்கியுள்ளது.

மாணவர்களே… உங்களுடைய உயிர், விலைமதிப்பில்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுகே முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில் தான் இந்த நாட்டுடைய எதிர்காலமே அடங்கியுள்ளது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். உங்களாலும் மருத்துவராக முடியும். உங்களால் நினைச்சதை சாதிக்க முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோட இருங்க. உங்கள் உயிரை மாய்த்து, உங்களின் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பம் தந்துவிடாதீர்கள். நீங்கள் கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளரவேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இங்கே ‘இதுதான் விதி’ என்று எதுமில்லை. விதியை, மதியால் வெல்ல முடியும்.

முயற்சிதான் வெற்றியை தரும் என வள்ளுவர் சொல்லியுள்ளார். அத்தகைய துணிச்சலும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கை கொண்டவராக மாணவர்கள் எல்லோரும் வளரவேண்டும், வாழவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை சொல்ல அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண் உருவாக்கி கொடுத்துக்கொள்ளோம். மாணவ மாணவியருக்கு ஆலோசனை சொல்லவும், அவர்கள் சொல்வதை கேட்கவும் நம்முடைய மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நம் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தரவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினோர் அனைவரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தயவுசெய்து… தயவுசெய்து… மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்றுகாட்டுவோம்”

இவ்வாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
தமிழ்நாடு1 hour ago

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய மாற்றங்கள்: பிற மாநிலத்தவர்களுக்கு ஆப்பு!

kushbu
கேலரி1 hour ago

மறுபடியும் ஹீரோயின்!.. மாடர்ன் உடையில் 30 வயசு குறைஞ்சு போச்சு.. குஷ்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ்நாடு2 hours ago

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி: 2512 ரெளடிகள் கைது!

இந்தியா2 hours ago

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு4 hours ago

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழ்நாடு4 hours ago

இரண்டு நாள் சரிவுக்கு பின் இன்று விலை உயர்ந்தது தங்கம்!

storm cyclone
இந்தியா4 hours ago

வங்கக்கடலில் புதிய புயல்: பெயர் என்ன தெரியுமா?

சினிமா செய்திகள்5 hours ago

பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்பிபி புத்தகம் வெளியீடு!

தமிழ்நாடு5 hours ago

சென்னையில் இருந்து கிளம்பிய விமான நடுவானில் திடீர் கோளாறு: பரபரப்பு தகவல்!

இந்தியா5 hours ago

திருப்பதியில் இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசனம் டோக்கன்: இணையதள முகவரி அறிவிப்பு

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

வீடியோ2 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ8 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ8 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ9 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ9 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்9 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!