ஊரடங்கு நேரத்தில் இலவச ஆட்டோ சேவை: முதல்வரிடம் பாராட்டு பெற்ற மதுரை இளைஞர்கள்!

ஊரடங்கு நேரத்தில் இலவச ஆட்டோ சேவை:  முதல்வரிடம் பாராட்டு பெற்ற மதுரை இளைஞர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் அரசு மட்டுமின்றி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்களுடைய ஆட்டோவை ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளின் வீட்டிற்கு செல்லவும், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும் இலவசமாக சேவை செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் அந்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மதுரை அனுப்பானடியில்‌ ஆட்டோ ஓட்டுநராக உள்ள தங்களின்‌ தொடர்ச்சியான மக்கள்‌ சேவை பாராட்டுக்குரியது. கொரோனா முதல்‌ அலையின்‌ போதும்‌, தற்போது மிகக்‌ கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும்‌ இரண்டாவது அலையிலும்‌ தங்களின்‌ ஆட்டோ மூலம்‌ நோய்த்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களையும்‌ - பிற நோயாளிகளையும்‌ மருத்துவமனைக்கு கட்டணம்‌ ஏதுமின்றி அழைத்துச்‌ சென்று உயிர்‌ காக்கும்‌ உன்னதமானப்‌ பணியைத்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்‌.

ஊரடங்கு நடைமுறையில்‌ உள்ள நிலையில்‌, மாவட்ட நிர்வாகத்திடம்‌ உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும்‌, ரயில்‌ பயணிகளையும்‌ இலவசமாக அழைத்துச்‌ செல்லும்‌ தன்னார்வலராகத்‌ தாங்கள்‌ மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள்‌ பணியால்‌ ஈர்க்கப்பட்டு இப்பணியில்‌ ஈடுபட்டுள்ள தங்கள்‌ நண்பர்‌ அன்புநாதன்‌ அவர்களும்‌ பாராட்டுக்குரியவர்‌. பேரிடர்‌ காலம்‌ எனும்‌ போர்க்களத்தில்‌ தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்குத்‌ துணை நிற்கும்‌ வகையில்‌ தாங்கள்‌ மேற்கொண்டுள்ள சேவையை அரசின்‌ சார்பில்‌ பாராட்டுகிறேன்‌. தாங்களும்‌ குடும்பத்தினரும்‌ நோய்த்‌ தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளைக்‌ கடைப்பிடித்து நலமுடன்‌ வாழ வாழ்த்துகிறேன்‌. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com