சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முதல் கல்லூரி தேர்வுகள் வரை பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருவதுமான செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஒரு சில தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளின் அட்டவணையை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 15ம் தேதி நடைபெறும் என்றும் இது குறித்த முழு விபரத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்து தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பின்படி சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு செமஸ்டர் ஜூன் 21ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள.து இந்த தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணையை சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யபப்ட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com