சென்னையில் இன்று முதல் போலீசார் கெடுபிடி: அபராதம் வசூலிக்கப்படுவதால் பரபரப்பு

சென்னையில் இன்று முதல் போலீசார் கெடுபிடி: அபராதம் வசூலிக்கப்படுவதால் பரபரப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி வெளியில் சுற்றுவதாகவும் அதனால் இன்று முதல் போலீசார் கெடுபிடி காட்ட துவங்கி உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இன்று காலை சென்னையில் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றும் நபர்களிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். அதே போல் தளர்வுகளை தவறாக பயன்படுத்தியவர்களிடமும் மாஸ்க் போடாத நபர்களிடமும் போலீசார் அபராதம் வசூலித்தனர். ஒரு சிலரை எச்சரிக்கையை மட்டும் செய்து அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவை இல்லாத காரணத்தால் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு என்பது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை தவறாக பயன்படுத்தி தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் கடும் சேதம் ஏற்படும் என்றும் அதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com