ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: கார்களையே ஆம்புலன்ஸாக மாற்றிய மேயர் ககன்தீப் சிங்

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: கார்களையே ஆம்புலன்ஸாக மாற்றிய மேயர் ககன்தீப் சிங்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி மேயராக சமீபத்தில் பதவி ஏற்ற ககன்தீப் சிங் அவர்கள் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை சரிகட்ட கார்களை ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்ற உத்தரவிட்டு உள்ளார்.

சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியை ஏற்ற ககன்தீப் சிங் அவர்கள் கார்கள் மூலம் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த ஆம்புலன்ஸ்களுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்கள் என பெயரிடப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சுமையைக் குறைக்கவும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிக்கும் விதமாகவும் இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் இயக்கப்படும் என்றும் இனி நோயாளிகள் வீட்டில் இருந்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்கு இந்த சிறப்பு ஆம்புலன்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் அவர்களின் இந்த வித்தியாசமான முயற்சியை பலர் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஐ.எம்.சி.ஆர் ஆராய்ச்சியாளர் ப்ரதீப் கவுர் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார் இந்த சிறப்பு ஆம்புலன்ஸில் நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர்களை காக்க உதவும் என்றும் புதுமையாக யோசித்த ககன்தீப் சிங் அவர்களுக்கு தனது பாராட்டுகள் என்றும் ப்ரதீப் கவுர் தெரிவித்துள்ளார்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com