கோயம்பேட்டில் குவிந்த வியாபாரிகள், நகர் முழுவதும் டிராபிக்: இருவார ஊரடங்கு வேஸ்ட்டா?

கோயம்பேட்டில் குவிந்த வியாபாரிகள், நகர் முழுவதும் டிராபிக்: இருவார ஊரடங்கு வேஸ்ட்டா?

கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு கட்டுக்கோப்புடன் அமல்படுத்தப்பட்ட வந்த நிலையில் சற்று முன்னர் தமிழக அரசு இன்றும் நாளையும் ஊரடங்கு இல்லை என்றும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமின்றி அனைத்து கடைகளும் திறக்கலாம் என்றும் அனைத்து பேருந்துகளும் இயக்கலாம் என்றும் பொது மக்கள் சாலைகளில் செல்லலாம் என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்த அடுத்த சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் பிசியாகிவிட்டது. கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டு அங்கு வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் குவிந்து வருகின்றனர். தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேருந்துகளில் வெளியூர் செல்பவர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு வாரங்கள் மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்து விட்டதால் பொதுமக்கள் மீண்டும் வழக்கம்போல் நடமாட துவங்கிவிட்டனர். இதனால் ஏற்கனவே 36 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் அடுத்த அடுத்த நாட்களில் 40 ஆயிரம் ஐம்பதாயிரம் என செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இன்றும் நாளையும் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் அவசியமற்றது என்றும் பேருந்துகள் இயக்குவது தேவையில்லாதது என்றும் அதற்கு பதிலாக தினமும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதன் விளைவு அடுத்த வாரம் தான் தெரியும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com