சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க அரசின் புது முயற்சி!

சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க அரசின் புது முயற்சி!

சென்னையில் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் நபர்களை கண்காணிக்கப் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி தரப்பு செயல்படுத்தி உள்ளது.

அது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று பாதிப்பால் வீட்டுத் தனிமையில் இருப்போருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க பயிற்சி மருத்துவர்கள் நியமனம்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை இறுதியாண்டு மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் மூலம் கண்காணிக்க உள்ளோம். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு உரிய மருத்துவ கவனிப்பு கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம்.

இதன் மூலம் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் தொடர்ந்து மருத்தவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்கள் எந்த வித பதற்றமும் அடையாமல் இருக்க முடியும். இந்த திட்டத்துக்காக சென்னை மாநகராட்சியால் பணிக்கு அமர்த்தப்படும் மருத்துவ மாணவர்களுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com