திறந்தநிலை பள்ளியில் படித்தவர்களுக்கு தகுதி இல்லையா? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

திறந்தநிலை பள்ளியில் படித்தவர்களுக்கு தகுதி இல்லையா? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தேசிய திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதி இல்லை என்ற விதி இருந்து வரும் நிலையில் இந்த விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதி இல்லை என்ற இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி தேர்வுக்குழு வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பை எதிர்த்து கோவை மாணவி வீரலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் போன்ற படிப்பில் சேர தேசிய திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்களுக்கு தகுதி இல்லை என்ற விதிக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com