தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையில் திருப்தி அடைகிறோம்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள்

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையில் திருப்தி அடைகிறோம்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐயாயிரம், ஆறாயிரம் என இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இருப்பினும் தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது சற்று ஆறுதல்படுத்துகிறது. குறிப்பாக இரண்டு வார ஊரடங்கு நடவடிக்கை என்பது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பேருதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் உயர்வாக இருந்தாலும் சதவீதம் குறைந்து இருப்பது சற்று ஆறுதல் தருகிறது என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் திருப்தி அடைகிறோம் என்றும் இருப்பினும் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com