சென்னையில் 18 - 44 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு முக்கியத் தகவல்

சென்னையில் 18 - 44 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு முக்கியத் தகவல்

இந்திய அளவில் 18 முதல் 44 வயது கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு இந்த மாதம் முதல் தேதியில் ஆரம்பித்தது. மத்திய அரசு இந்தத் திட்டத்தை ஆரம்பித்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தினால் 18 முதல் 44 வயது கொண்டவர்களுக்கான முகாம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் இந்த முகாம் சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முகாமை சென்னையில் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் சென்னையிலும் 18 முதல் 44 வயது கொண்ட வகுப்பினருக்கு தடுப்பூசி போடும் முகாம், அரசு சார்பில் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விஷயம் குறித்துப் பேசியுள்ள சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி,

'தமிழகத்தில் 18 முதல் 44 வயது கொண்ட பிரிவுக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த வயதில் இருக்கும் முன் கள பணியாளர்களான பத்திரிகையாளர்கள், செய்தித் தாள் போடுபவர்கள், பால் காரர்கள், அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அனைவரும் தாமாக முன் வந்து அருகில் உள்ள முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com