ஜூன் 14 முதல் ஐகோர்ட் செயல்படும்: 50% பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிப்பு!

ஜூன் 14 முதல் ஐகோர்ட் செயல்படும்: 50% பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் கோடை விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை ஜூன் 14 முதல் செயல்படும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை செயல்படும் என நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற ஊழியர்களை இரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவினர்களும் 2 நாட்கள் என சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என்றும் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் கோடைவிடுமுறை காரணமாகவும் பல வழக்குகள் தேங்கிக் இருந்த நிலையில் தற்போது சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை இயங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 29 வழக்கறிஞர்களும் மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்திற்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com