சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் 12ஆம் வகுப்பு தேர்வா? இன்று முக்கிய ஆலோசனை!

சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் 12ஆம் வகுப்பு தேர்வா? இன்று முக்கிய ஆலோசனை!

உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்வில் முக்கியம் என்பதால் சில குறிப்பிட்ட பாடங்களூக்கு மட்டுமாவது 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் காணொளி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களும் அவர்களும் கலந்து கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ. போன்ற தொழில்நுட்ப நுழைவுத் தேர்வுகளும் அனைத்து மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 12ஆம் வகுப்பு தேர்வு என்பது உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடிப்படை முக்கியம் என்பதால் அந்த தேர்வை நடத்துவது என்றும் குறைந்தபட்சம் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மட்டுமாவது நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனை வழங்குவார்கள் என்றும் அதன் பின்னர் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் அதனால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண் என்றும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com