ஊரடங்கை மதிக்காமல் சுற்றும் மக்கள்; அதிரடியில் இறங்கிய சென்னை காவல் துறை!

ஊரடங்கை மதிக்காமல் சுற்றும் மக்கள்; அதிரடியில் இறங்கிய சென்னை காவல் துறை!

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. குறிப்பாக கடந்த 25 ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கை மதிக்காமலும், இ-பதிவு செய்யாமலும் வாகனங்களில் வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது சென்னை மாநகர காவல் துறை.

இது பற்றி சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 3,031 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1,947 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நேற்று மட்டும் முகக் கவசம் அணியாத 2,074 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 223 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com