தமிழகத்தில் பரவும் கருப்பு பூஞ்சை: தடுப்பது எப்படி?- அமைச்சர் பதில்

தமிழகத்தில் பரவும் கருப்பு பூஞ்சை: தடுப்பது எப்படி?- அமைச்சர் பதில்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைப் போல பலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கும் இந்த நோய், பரவாமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதைத் தடுப்பது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில், 'தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை இருக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை நோய்ப் பரவலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நோக்கில், நாளை மறுநாள் சிறந்த மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவுடன் நானும் எங்கள் துறை செயலாளரும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இந்த ஆலோசனையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்திருக்கிறார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com