சட்டப்படிப்புக்கு இறுதியாண்டு தேர்வு உண்டா? பார் கவுன்சில் முக்கிய அறிவிப்பு

சட்டப்படிப்புக்கு இறுதியாண்டு தேர்வு உண்டா? பார் கவுன்சில் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு நடைபெறுமா? என்பது குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சட்டக்கல்லூரியின் பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து சட்ட படிப்புக்கும் இன்டர்மீடியட், இறுதியாண்டு தேர்வு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதா? அல்லது ஆஃப்லைனில் நடத்துவது அல்லது எந்த முறையில் தேர்தல் தேர்வை நடத்துவது என்பதை அந்தந்த சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பு தேர்வு தொடர்பாக அறிக்கை தர உயர்நிலை குழு ஒன்று இந்திய பார் கவுன்சில் நியமித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்நிலை குழு அளித்த அறிக்கை அடிப்படையில் சட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடைபெறும் என பார் கவுன்சில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com