தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் விலை ரூ.3 குறைந்தது!

ஆவின் பால் நீலம் நிறப் பாக்கெட் ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கும், பச்சை பாக்கெட் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும், ஆரஞ்சு நிறம் ஒரு லிட்டர் 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் விலை ரூ.3 குறைந்தது!

மே 7-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 4 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.

அதன் பெயரில் இன்று முதல் தமிழகத்தில் ஆவின் பால் விலை 3 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆவின் பால் நீலம் நிறப் பாக்கெட் ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கும், பச்சை பாக்கெட் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும், ஆரஞ்சு நிறம் ஒரு லிட்டர் 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீல நிறம் ஆவின் பால் பாக்கெட்

ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் நீலம் நிற பால் பாக்கெட் விலை 21.50 ரூபாயிலிருந்து 1.50 ரூபாய் குறைத்து 20 ரூபாய் என விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ஆவின் பால் கார்டு வாங்கினால் 18.50 ரூபாய்க்கு 500 மிலி பால் கிடைக்கும்.

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்

இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர். 500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட் விலை 24 ரூபாயில் இருந்து 22 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட்

இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் பாக்கெட். குறைந்த கொழுப்பு இருக்கும். மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட் 500 மிலி 18.50 ரூபாய்க்கு கிடைக்கும்.

ஆவின் பால் கார்டு சந்த விலை குறைப்பு (500 மிலி)

30 நாட்களுக்கான நீல நிறம் ஆவின் பால் பாக்கெட் சந்தா 555 ரூபாய். பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் மாத கார்டு சந்தா 630 ரூபாய்.பழுப்பு நிற பால் பாக்கெட் சந்தா 690 ரூபாய். மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட் மாத கார்டு 540 ரூபாய்.

அரசுக்கு கூடுதல் செலவு

ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைத்துள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பால் விலை குறைப்பு மே 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com