ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தெறித்து ஓடியதால் பரபரப்பு: என்ன காரணம் தெரியுமா?

ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தெறித்து ஓடியதால் பரபரப்பு: என்ன காரணம் தெரியுமா?

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் சென்ற பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தெறித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் என்ற பகுதிக்கு செல்லும் விரைவு ரயில் நேற்று ரயில்வே நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் திடீரென ரயில் நிலையத்திலிருந்து தெறித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பயணிகளை பரிசோதனையில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து இறங்கியதும் நாலாபக்கமும் சிதறி தெறித்து ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அசாம் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பல ரயில் பயணிகளை வலுக்கட்டாயமாக பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பித்து சென்று விட்டாலும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து விட்டதாகவும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அனைத்து ரயில் நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற கட்டாயம் என அமல்படுத்தினால் பிற மாநிலங்களிலிருந்து கொரோனா பரவுவது குறையும் என்று கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com