கொரோனா நிவாரண நிதி: ஏ.ஆர். முருகதாஸ் அளித்த மிகப்பெரிய தொகை

கொரோனா நிவாரண நிதி: ஏ.ஆர். முருகதாஸ் அளித்த மிகப்பெரிய தொகை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள அதிக நிதி தேவைப்படுவதாகவும் எனவே பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் திரையுலகினர் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்களும் அதிக நிதி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசுக்கு நிதி குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் ஒரு கோடி நிதி அளித்ததாக வெளிவந்த தகவலை பார்த்தோம். தற்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது பங்காக ரூபாய் 25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அவர் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இந்த தொகையை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 25 லட்சமும், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார்கள். மேலும் சில திரையுலக பிரபலங்கள் இன்று முதல்வரை சந்தித்து நிதி உதவி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் ரூபாய் 10 லட்சம் கொரோனா நிவாரண பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதியாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com