பத்மா சேஷாத்ரி பள்ளியை அடுத்து மேலும் ஒரு பள்ளி மீதும் பாலியல் குற்றச்சாட்டு!

பத்மா சேஷாத்ரி பள்ளியை அடுத்து மேலும் ஒரு பள்ளி மீதும் பாலியல் குற்றச்சாட்டு!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னையில் உள்ள மற்றொரு பள்ளி மீதும் இதே போன்ற ஒரு பாலியல் குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் மீது முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் கொடுத்துள்ளதற்கு அந்த ஆசிரியர் ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

உங்கள் அனைவருக்கும் என்னை நன்றாகவே தெரியும். அதிலும் என்னுடைய காமர்ஸ் படித்த மாணவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். எனது பணி அர்ப்பணிப்பு குறித்து கடவுளுக்கு தெரியும். என் அன்பான மகளே, உங்களுக்கும் தெரியும். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருப்பேன். எனது மாணவர்களை நான் எப்போதும் பாதுகாப்பேன். இதை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் என்னிடம் படித்தவர்களாக இருக்க மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார். முன்னாள் மாணவியின் இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com