நீட் எதிர்ப்பே நமது கொள்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

நீட் எதிர்ப்பே நமது கொள்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டுமா இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வரும் நிலையில், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் எதிர்ப்பு என்பது நமது கொள்கை என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது நீட் தேர்வு. இந்த தேர்வு முறைக்கு திமுக, எதிர்க்கட்சியாக இருந்த போதிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது ஆட்சிக்கு வந்த பின்னரும், நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மகேஷ், 'நீட் எதிர்ப்பு என்பது நம் அரசின் அடிப்படை கொள்கையாகும். சீக்கிரமே சட்ட மன்றம் கூடும். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், எக்காரணம் கொண்டும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய அரசிடம் நாம் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்' என்றுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com