ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து: கோவையில் பரபரப்பு

ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து: கோவையில் பரபரப்பு

கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென தீ விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை அழைத்துக் கொண்டு இன்று காலை ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. நோயாளி இறங்கிய சில நிமிடங்களில் அந்த ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் தீயை போராடி அணைத்தனர். ஆம்புலன்ஸ் முறையாக பராமரிக்காமல் இருந்ததே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்த தீ விபத்தில் ஆம்புலன்ஸ் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த ஒரு சிலர் அதனை செல்பி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com