அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் முக்கிய அறிவிப்பு!

அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் முக்கிய அறிவிப்பு!

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிக்கும் மாணவர்களுக்கான விண்ணப்பிக்கும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்ப கால அவகாசம் மே 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேதி தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தற்சமயம் தமிழகத்தில் நிலவி வரும் பெரும் பெருந்தொற்றினாலும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் நீட்டிப்பு செய்து உள்ளதாலும் 2021-2022 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டிற்கான பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பல்கலைக் கழக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com