காய்கறி மளிகை வாங்க நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

இரண்டு மணிநேரம் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காய்கறி மளிகை வாங்க நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 6 மணி முதல் 12 மணி வரை திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தி நான்கு நாட்கள் ஆகியும் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை என்பது தளர்வுகளை தவறாக பயன்படுத்தி பலர் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதாலும் தற்போது தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

இதன்படி மே 1-ம் தேதி முதல் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காய்கறிகள் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு மணிநேரம் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com