கொரோனாவுக்கு பலியான நடிகர்-ஊடகவியலார்: அதிர்ச்சி தகவல்!

கொரோனாவுக்கு பலியான நடிகர்-ஊடகவியலார்: அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலகைச் சேர்ந்தவர்களும், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களும், காவல் துறையைச் சேர்ந்தவர்களும் பலர் பலியாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.

நடிகர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான குமரகுருபரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ’நம்மால் முடியும் நம்பு’ என்ற நிகழ்ச்சியையும் நியூஸ்18 தொலைக்காட்சியில் ’இப்படிக்கு இவர்கள்’ ’கேள்விகள் ஆயிரம்’ ’அறிவோம் தெளிவோம்’ என பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர் குரு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் திரைப்பட இயக்குனரும் பத்திரிகையாளருமான ராஜூ முருகனின் சகோதரர் என்பதும், இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com