சிவகார்த்திகேயன் தந்தையை கொலை செய்ததாக கூறிய விவகாரம்: எச்.ராஜா மீது புகார்

சிவகார்த்திகேயன் தந்தையை கொலை செய்ததாக கூறிய விவகாரம்: எச்.ராஜா மீது புகார்

சிவகார்த்திகேயன் தந்தையை தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ தான் கொலை செய்தார் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் அளித்த பேட்டியின்போது தற்போது பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா தான் சிவகார்த்திகேயன் தந்தையை கொலை செய்தார் என்று கூறியிருந்தார். இந்த தகவல் முரணான தகவல் என்றும் கொலை செய்யப்பட்டவரின் பெயர் ஜெயப்பிரகாஷ் என்றும் ஆனால் சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்றும் அவர் கொலை செய்யப்படவில்லை என்றும், எச்.ராஜா தவறான தகவலை குறிப்பிட்டு உள்ளார் என்றும் பத்திரிகையாளர்கள் பலர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் ஜவஹருல்லா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எச். ராஜா அவர்கள் அபாண்டமான குற்றச்சாட்டு கூறியதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com