பிளஸ் டூ தேர்வில் புதிய மாற்றங்கள்: முதல்வரின் அனுமதிக்காக காத்திருப்பு என தகவல்!

பிளஸ் டூ தேர்வில் புதிய மாற்றங்கள்: முதல்வரின் அனுமதிக்காக காத்திருப்பு என தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வு நடக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால் திமுக தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் பிளஸ் டூ தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து பிளஸ் டூ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஏற்கனவே செய்முறை தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் எழுத்து தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் ஆனால் அதில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேர்வில் மாற்றங்கள் செய்வது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய ஒப்புதலுக்கு பிறகு என்னென்ன மாற்றங்கள் என்பது வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிளஸ் டூ தேர்வில் தமிழ் ஆங்கிலம் உள்பட மொழித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முக்கிய தேர்வுகள் மற்றும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com