முதல்வர் முக ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

முதல்வர் முக ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

தமிழக முதல்வராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இல்லத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக கூறி போனை கட் செய்துள்ளார். மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் கமலஹாசன், விஜயகாந்த், தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com