நள்ளிரவில் சென்னைக்கு வந்த 80 டன்கள் ஆக்சிஜன் ரயில்: அமைச்சர்கள் வரவேற்பு

நள்ளிரவில் சென்னைக்கு வந்த 80 டன்கள் ஆக்சிஜன் ரயில்: அமைச்சர்கள் வரவேற்பு

நேற்று நள்ளிரவு சென்னைக்கு மேற்குவங்க மாநிலத்தில் இருந்து 80 டன்கள் கொண்ட ஆக்சிஜன் ரயில் வந்ததை அடுத்து அந்த ரயிலை அமைச்சர்கள் வரவேற்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜனை வரவழைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலம் தாராப்பூர் என்ற இடத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் கூடிய ரயில் நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தது. இந்த ரயிலை அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் வரவேற்றனர். இந்த ரயிலில் வந்த 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை நான்கு லாரிகளில் மாற்றப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒவ்வொரு லாரியிலும் 20 மெட்ரிக் டன் என்ற வீதம் நான்கு லாரிகளில் ஆக்சிஜன் மாற்றப்பட்டதாகவும் இந்த ஆக்சிஜன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com