சென்னையில் மட்டும் கூடுதலாக 7000 காய்கறி வண்டிகளுக்கு அனுமதி!

சென்னையில் மட்டும் கூடுதலாக 7000 காய்கறி வண்டிகளுக்கு அனுமதி!

சென்னையில் காய்கறி வியாபாரம் செய்ய 5000 தள்ளு வண்டிகள் மற்றும் 2000 குட்டியானை வண்டிகளுக்கு அனுமதி அளித்து சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தோட்டக்கலை துறையின் சார்பாக காய்கறி வியாபாரம் நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 5,000 தள்ளுவண்டி காய்கறி வியாபாரிகளுக்கும் 2000 குட்டியானை காய்கறி வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கி அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். இதன் தொடக்க விழா இன்று கேகே நகரில் நடைபெற்றது.

மேலும் காய்கறி வியாபாரம் செய்ய விரும்புபவர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு உரிய அனுமதி அளித்து அடையாள அட்டையும் வழங்கப்படும் என்றும் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டும் சென்னையில் காய்கறி வியாபாரம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தள்ளுவண்டி மற்றும் குட்டியானையில் காய்கறி வியாபாரம் செய்பவர்கள் அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிக விலைக்கு விற்பதாக புகார் இருந்தால் அவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7000 காய்கறி வண்டிகளுக்கு அனுமதி அளித்துள்ளது அடுத்து சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com