ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் புகார்: திடுக்கிடும் தகவல்!

ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் புகார்: திடுக்கிடும் தகவல்!

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்படி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும், அவர் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காவல்துறை அதிகாரிகள் பாலியல் தொல்லைக்கு ஏற்பட்ட மாணவிகள் தாராளமாக வந்து புகார் கொடுக்கலாம் என்றும் அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்களது பாதுகாப்புக்கு காவல்துறை உறுதி என்றும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அடுக்கடுக்காக சுமார் 30 மாணவிகள் வரை இதுவரை புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராஜகோபாலனின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் சைபர் கிரைம் போலீசார் அந்த மெசேஜ்கள் அனைத்தையும் மீட்டு விட்டனர் என்றும் அதிலும் பல திடுக்கிடும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com