திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: 20 மாரத்தான் வீரர்கள் பலி, 5 பேர்களை காணவில்லை!

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: 20 மாரத்தான் வீரர்கள் பலி, 5 பேர்களை காணவில்லை!

மாரத்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வீரர்கள் 20 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள கன்சு-பைன் என்ற நகரின் மலைப்பகுதியில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 172 பேர் கலந்து கொண்டனர். இதில் வீரர்கள் மலைப்பகுதியில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென தட்பவெப்ப நிலை மாறுதல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்தது. பெரிது பெரிதாக ஐஸ்கட்டிகள் மழையின் காரணமாகவும் தட்பவெப்ப மாறுதல் காரணமாகவும் அடுத்தடுத்து மாரத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருந்த வீரர்கள் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளனர். இதுவரை 20 பேர் பலியாகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட 5 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் காணாமல் போன 5 பேரை தேடுவதற்காக மீட்பு படையினர் விரைந்து உள்ளதாகவும் விரைவில் அவரை கண்டுபிடித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. திடீரென தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் ஆலங்கட்டி மழையால் 20 மாரத்தான் போட்டி வீரர்கள் பலியாகி உள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com