பிளஸ் 2 தேர்வு: தொடரும் சிக்கல்கள்; அரசின் நடவடிக்கை என்ன?

பிளஸ் 2 தேர்வு: தொடரும் சிக்கல்கள்; அரசின் நடவடிக்கை என்ன?

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இன்னும் சில நாட்களில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும், எப்படி நடத்தப்படும் என்பது குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை ஆலோசனை செய்து வருகிறது.

நடப்பு ஆண்டில் சுமார் 9 லட்சம் மாணவர்கள், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்களில் 7 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் தான் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 9 லட்சம் மாணவர்களில், 2 லட்சம் மாணவர்களிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற உபகரணங்கள் இல்லாத காரணத்தினால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், எப்படி பொதுத் தேர்வை நடத்துவது என்கிற குழப்பத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளது.

இந்நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 'ஸ்மார்ட் போன் இல்லாதது ஒரு பிரச்சனை என்றால், சுமார் 30 சதவீத மாணவர்களுக்கு இணையதள இணைப்பு வசதி இருக்கவில்லை. இதைத் தீர்க்க ஆலோசித்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com