விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல: பெட்ரொலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல: பெட்ரொலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

வாகனங்களை கவனமாக பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் என்றும், வாகனங்கள் பழுதுபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகம் செய்யப்படுவதாகவும் இதனால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளது.

10% எத்தனால் கலந்த பெட்ரோல் உபயோகிப்பதால் வாகனங்களில் தண்ணீர் இறங்காமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாகன உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் அறிவுறுத்தி உள்ளது. மெத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் சேர்ந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு என்றும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருக்கும் வாகன ஓட்டிகள் தற்போது வாகனங்களில் தண்ணீர் இறங்கினால் எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக வாகனங்கள் பழுதுபடும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com