செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்தும் எழுதலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்தும் எழுதலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளன என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பார்த்தும் பதில்களை எழுதலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரிவரி கேள்வி பதில் இல்லாமல் விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்கவும் அண்ணாபல்கலைக்கழகம் அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்தும், இணையதளங்களைப் பார்த்தும் எழுதலாம் என மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com