ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாதம்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாதம்!

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? என மக்களிடம் கருத்து கேட்டு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் குழுவினரும் கலந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் ஆக்சிஜனுக்காக திறக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை அதன்பிறகு தாமிர உற்பத்திக்கும் வழி வகுத்து விடும் என்றும் அந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்றும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com