Connect with us

தமிழ்நாடு

குவார்ட்டர் பாட்டிலில் குட்டி பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்!

Published

on

டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் குட்டி பாம்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சமீபத்தில் டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டில் ஒன்று வாங்கி வாங்கினார். பாதியை குடித்துவிட்டு மீதியை பிறகு குடிக்கலாம் என்று வைத்து இருந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அந்த மது பாட்டிலை பார்த்தபோது மதுபாட்டில் உள்ளே ஒரு குட்டி பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் சுரேஷிடம் கூறியதை அடுத்து அவர் அதிர்ச்சியில் மயக்கமடைந்து விழுந்து விட்டார். இதனை அடுத்து சுரேஷ் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மது பாட்டிலில் பாம்பு இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அந்த பகுதியில் உள்ளவர்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள குடிமகன்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?