ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படைத்த இந்திய மாணவி.. மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படைத்த இந்திய மாணவி.. மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி

லண்டன் : உலகின் மிக பிரபல பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த மாணவி.

கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் ஒன்றியத்தின் தேர்தலில் இந்தியாவை சேர்ந்த மாணவி ரஷ்மி சமந்த் போட்டியிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் லினாக்ரே கல்லூரியில், நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, எரிசக்தி அமைப்புகளில் எம்.எஸ்.சி., படிக்கும் பட்டதாரி மாணவியான இவர் அந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு வந்த முதல் இந்திய மாணவி ரஷ்மி சமந்த் தான். மொத்தம் பதிவான 3,708 வாக்குகளில் 1,966 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2021-2022 ஆண்டுக்கான இந்த தேர்தலில் அவருடன் மேலும் சில இந்தியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை தலைவராக தேவிகாவும், மாணவர் அறங்காவலர்களாக டிடி கோயலும் வெற்றி பெற்றனர்.

மணிப்பால் ஐஐடியில் படித்த இந்தியாவை சேர்ந்த ரஷ்மி சமந்த் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காலனித்துவ நிலையை நீக்குதல் போன்ற முக்கிய வாக்குறுதிகளை வழங்கியது மாணவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் ஒன்றாக இணைந்து, பல்கலைக்கழகத்தில் நீண்டகால குறைபாடுகளை சீர்திருத்தலாம். மாணவர்களுக்கு தேவையான ஆதரவுகளை, வளங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் வழங்கினார்.

முன்னாள் பிரிட்டிஷ் காலனியைச் சேர்ந்த ஒரு கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன பெண்ணாக இருப்பதால், ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு ரஷ்மி பரிவு காட்டுவார் என்றும் அவருடைய திட்டங்களில் கூறப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியம் என நிரூபிக்கப்பட்ட அனைத்து சிலைகளையும் அகற்றுவதற்காக பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் மாநாட்டை லாபி செய்வதாகவும், ஆக்ஸ்போர்டு பாடநூல்களில் மாணவர்களுக்கு மாறுபட்ட அறிவார்ந்த குரல்களின் சாதனைகள் குறித்து கொண்டாடுவதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் உறுதி செய்வதற்காக பாடத்திட்டங்களில் காலனியத்துவம் நீக்குதல் குறித்து விரிவான ஆலோசனையை நடத்துவதாக சமந்த் உறுதியளித்துள்ளார்.

இதுவரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு எந்த இந்தியாவை சேர்ந்த மாணவியும் வந்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளுடன் ரஷ்மி சமந்த் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com