Connect with us

தமிழ்நாடு

தலைவர் மீண்டும் கட்சி தொடங்குகிறார்: ரஜினி மன்ற முக்கிய நிர்வாகியின் அறிக்கை!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க வில்லை என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நிலையில் ஒரு சில ரஜினி மன்ற நிர்வாகிகள் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவினார்கள். இந்த நிலையில் ரஜினியின் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் முடிவு செய்தபோது அவரை தொடர்பு கொண்ட ரஜினி தரப்பினர், ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், எனவே உங்கள் முடிவை நிறுத்துங்கள் என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த ரசிகர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

திரு ரஜினிகாந்த்‌ மீண்டும்‌ அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார்‌, அதிரடியாக கட்சித்‌ தொடங்கி தமிழக முதல்வராகவும்‌ அமர்வார்‌ என ரஜினி மக்கள்‌ மன்ற மாவட்ட துணை செயலாளர்‌ ஆர்‌எஸ்ராஜன்‌ தெரிவித்துள்ளார்‌. இதுகுறித்து, குமரி மாவட்ட ரஜினி மக்கள்‌ மன்ற மாவட்ட துணை செயலாளர்‌ ஆர்‌எஸ்.ராஜன்‌ விடுத்துள்ள அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது:

“தப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ தமிழ்‌ ரசிகர்களின்‌ இதய சிம்மாசனத்தில்‌ என்றும்‌ மன்னராக இருக்கிறார்‌. தமிழகத்தின்‌ ஒரே சூப்பர்‌ ஸ்டார்‌ தலைவர்‌ ரஜினி தான்‌. கருப்பு வெள்ளை காலத்தில்‌ தொடங்கிய அவரது கலைப்பயணம்‌ கலர்‌ பட காலத்துக்குள்‌ நுழைந்து, 3டி தொழில்நுட்பத்தில்‌ எந்திரன்‌ அனிமேஷன்‌ காட்சியாக கோச்சடையான்‌ என அற்புதங்களை நிகழ்த்தியவர்‌. இத்தனை நீண்ட கலையனுபவம்‌ இந்தியாவில்‌ வேறு எந்த நடிகருக்குமே வாய்த்தது இல்லை.

ரஜினிகாந்தின்‌ ஆரம்ப காலக்கட்டம்‌ முதல்‌ அவரது தீவிர ரசிகனாக நானும்‌ கோடிக்கணக்கான ரசிகக்‌ கண்மணிகளும்‌ இருக்கிறோம்‌. ஆனால்‌ நாங்கள்‌ யாரும்‌ அவர்‌ முதல்வராக வேண்டும்‌ என்றோ கட்சி தொடங்குவார்‌ நாமும்‌ எம்‌.எல்‌.ஏ எம்பியாகிவிடலாம்‌ என்றோ அவருக்கு ரசிகர்‌ ஆனவர்கள்‌ கிடையாது. அவரை சகோதரனாக இன்னும்‌ சொல்லப்‌ போனால்‌ கலைத்தாயின்‌ தலைமகனை எங்கள்‌ விட்டின்‌ மூத்த அண்ணனாகவே அவரது ரசிகர்கள்‌ பார்த்துவருகிறோம்‌. அதனால்‌ தான்‌ எப்போதும்‌ அவரை பின்‌ தொடரும்‌ நிழலாகச்‌ செல்கிறோம்‌.

‘திரையில்‌ ரஜினியைப்‌ பார்த்ததும்‌ விசிலடிக்கும்‌ ரசிகர்களாக மட்டுமல்லாது தலைவரின்‌ எண்ணப்படியே எங்களால்‌ இயன்ற சேவைகளையும்‌ கடந்த முப்பது ஆண்டுகளாகச்‌ செய்து வருகிறோம்‌. திராவிட தேசிய கட்சிகளில்‌ பொறுப்பில்‌ இருப்பதைவிட தலைவர்‌ ரஜினிகாந்தின்‌ ரசிகன்‌ எனச்‌ சொல்வதில்‌ பெருமைப்பட்டுக்‌ கொள்ளும்‌ மனநிலையில்‌ இருப்பவர்களே நாங்கள்‌. தமிழகம்‌ இப்போது பாழ்பட்டுக்‌ கிடக்கிறது. திமுகவும்‌ அதிமுகவும்‌ போட்டி போட்டுக்கொண்டு ஊழல்‌ செய்தார்களே தவிர தமிழகத்துக்கு விமோச்சனம்‌ கிடைக்கவில்லை. இன்றும்‌ இலவசப்‌ பொருள்களுக்கு கையேந்தும்‌ நிலைக்கு தமிழினம்‌ நிற்பது அவமானத்தின்‌ குறியீடு

அதனால்‌ தான்‌ இங்கே சிஸ்டம்‌ சரியில்லை என்றார்‌ தலைவர்‌ ரஜினிகாந்த்‌ மாற்றம்‌ வேண்டும்‌ என்னும்‌ நம்பிக்கையில்‌ தான்‌ அவர்‌ பின்னால்‌ திரண்டோம்‌. 2017ஆம்‌ ஆண்டு தலைவர்‌ ரஜினிகாந்த்‌ அரசியலுக்கு வருகிறேன்‌ எனச்‌ சொன்னபோது நான்‌ உள்பட ரசிகர்கள்‌ பலரும்‌ பெருமகிழ்ச்சி அடைந்தோம்‌. மேலும்‌ நான்‌ அப்போது காங்கிரஸ்‌ கட்சியின்‌ விவசாய அணியின்‌ மாநில செயலாளர்‌ பொறுப்பையும்‌ ராஜினாமா செய்து விட்டு தலைவர்‌ ரஜினிகாந்த்‌ வழியில்‌ தொடர்ந்து பயணித்து வருகிறேன்‌ கடந்த டிசம்பர்‌ மாத இறுதியில்‌ தலைவர்‌ கட்சி தொடங்கும்‌ முடிவை கைவிட்டது ரசிகர்கள்‌ மத்தியில்‌ பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினியை விட்டால்‌ தமிழகத்தை மீட்க யாரும்‌ இல்லை என தமிழக மக்களே பேசத்‌ துவங்கிய நேரத்தில்தான்‌ தலைவர்‌ இந்த முடிவை எடுத்திருந்தார்‌.

நானும்‌ கூட இந்த முடிவால்‌ கடும்‌ அதிர்ச்சியடைந்தேன்‌. தலைவர்‌ ரஜினிகாந்த்‌ பெயரில்‌ கட்சி தொடங்குவதாக அறிவிப்பும்‌ செய்து இருந்தேன்‌. அந்த அறிவிப்பைப்‌ பார்த்துவிட்டு தமிழகம்‌ முழுவதிலும்‌ இருந்து லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள்‌ தொடர்ந்து என்னை தொடர்புகொண்டே இருந்தனர்‌. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ கிளை அமைக்கும்‌ பணியிலும்‌ ஈடுபட்டு வந்தேன்‌. இம்மாத இறுதிக்குள்‌ தலைவர்‌ ரஜினியின்‌ பெயரிலேயே கட்சி தொடங்கி பேரறிஞர்‌ அண்ணா திமுகவை தொடங்கிய போது தலைவர்‌ பதவியை தந்த பெரியாருக்கு விட்டுவைத்தது போல விட்டுவைக்க நினைத்தோம்‌. தலைவர்‌ மனம்‌ மாறும்போது இந்த பதவியில்‌ வந்து எங்களை வழிநடத்தட்டும்‌ என்பதுதான்‌ நோக்கமாக இருந்தது.

ஆனால்‌ இப்போது தலைமையில்‌ இருந்தே நேரடியாக என்னைத்‌ தொடர்புகொண்டு பேசினார்கள்‌. தலைவர்‌ மீண்டும்‌ கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையில்‌ இருப்பதாகவும்‌ விரைவில்‌ நல்ல முடிவு எடுப்பார்‌ எனவும்‌ கூறியிருக்கிறார். தலைவர்‌ ரஜினிகாந்த்‌ அரசியலுக்கு வருவதாக சொல்லும்‌ நாள்‌ தான்‌ உண்மையில்‌ தமிழக மக்களின்‌ திருநாள்‌. அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்‌. அதனால்‌ புதிய கட்சித்‌ தொடங்கும்‌ பணியைத்‌ தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு தலைவர்‌ ரஜினிகாந்தின்‌ வருகைக்காக காத்திருக்கிறேன்‌. தலைவர்‌ ரஜினிகாந்த்‌ விரைவில்‌ அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார்‌. அந்த அறிவிப்பு தமிழ்‌ மக்களுக்கு பெருமகிழ்ச்சியைத்‌ தரும்‌.

அவருக்காக உழைப்பதையும்‌ அவர்‌ அரியணையில்‌ அமர்ந்து தமிழர்‌ நலன்‌ சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதையும்‌ கண்‌ குளிர பார்க்க வேண்டும்‌ என்பதே ஒவ்வொரு ரசிகனின்‌. ஏன்‌ தமிழக மக்களின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது என அதில்‌ கூறப்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?