சிஎஸ்கே vs ராஜஸ்தான்: டாஸ் வென்ற சஞ்சுசாம்சன் எடுத்த அதிரடி முடிவு!

சிஎஸ்கே vs ராஜஸ்தான்: டாஸ் வென்ற சஞ்சுசாம்சன் எடுத்த அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரின் 12வது போட்டியான இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சென்னை அணி பேட்டிங்கில் இன்னும் சில நிமிடங்களில் களம் இறங்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள்தான் இன்றும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராஜஸ்தான் அணியும் முந்தைய போட்டியில் உள்ள வீரர்களை களமிறக்கி உள்ளது.

சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருக்கும் நிலையில் இன்று வெற்றி பெறும் அணி 4 புள்ளிகள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,. இதனால் இரு அணிகளும் இன்றைய வெற்றிக்காக தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்

ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com