புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி: பிரேமலதாவின் உளறல்!

புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி: பிரேமலதாவின் உளறல்!

சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என பாஜகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவை சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கோவை தொகுதியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சியை சேர்ந்த தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கணபதி பேருந்தி நிறுத்தம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியவர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி என கூறி பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த உளறல் பேச்சு தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே புல்வாமா தாக்குதலில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளநிலையில் இந்த தாக்குதலை நடத்தியதே மோடி என பிரேமலதா கூறியுள்ளது மேலும் சர்ச்சையாகியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com