இன்றுடன் முடிகிறது செய்முறை தேர்வு: பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையா?

இன்றுடன் முடிகிறது செய்முறை தேர்வு: பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையா?

12அம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்றுடன் செய்முறைத்தேர்வு முடிவடைவதால் நாளை முதல் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக 12அம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்ற அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கிய நிலையில் அந்த தேர்வு இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து நாளை முதல் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் வர வேண்டுமா? அல்லது விடுமுறையா? என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை செய்முறைத்தேர்வு முடிவடைந்தவுடன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com